திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – நீதிக்காக பணிபுரிவோர்க்கான யூபிலி
நீதிக்காக பணிபுரிவோர்க்கான யூபிலி நாளானது திருஅவையில் சிறப்பிக்கப்படுகின்றது. பொது நிலையினர், திருச்சட்டத்தார், திருஅவை உலகம் ஆகிய நிலைகளில் நீதிக்காகப் பணியாற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட பயிற்சியாளர்கள் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் இந்நாளை சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
சனிக்கிழமை காலை 8 மணியளவு முதலே வத்திக்கான் வளாகத்தில் அனுமதிக்கப்படும் இந்த யூபிலி கொண்டாட்டத்தாரை காலை 10.30 மணியளாவில் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் வரவேற்று நிகழ்வினை ஆரம்பிக்க உள்ளார்.
அதன் பின் நீதியை ஏற்படுத்துபவர்கள் எதிர்நோக்கின் கருவிகள் என்ற தலைப்பில் பேரருள்திரு Juan Ignacio Arrieta அவர்கள் உரையாற்ற இருக்கின்றார். அதனைத்தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை வழங்க இருக்கின்றார்.
நண்பகலில் திருயாத்திரையாக வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவு வழியாக நுழைந்து திருப்பயணம் மேற்கொள்வர் இந்த நீதிக்காக பணியாற்றுவோர்க்கான யூபிலி கொண்டாட்டத்தினர்.
Comments are closed.