படைப்பாளரின் மகிமையை அறிவிக்கும் கடவுளின் படைப்பு
சொற்களும் பேச்சுக்களும் இல்லாவிட்டாலும், கடவுளின் படைப்பு அதன் படைப்பாளரின் மகிமையை அறிவிக்கின்றது என்றும், மனிதன் அதன் நம்பிக்கைச் செய்தியை தனது இருப்பின் தெளிவான நாள்களின் வெளிச்சத்தில் மட்டுமல்லாது, மனித நிலைக்கு ஏற்ற வேதனை மற்றும் துன்பத்தின் இரவுகளிலும் கேட்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 10, புதன் முதல் 12, வெள்ளிக்கிழமை வரை உரோமில் படைப்பின் மொழிகள் என்ற தலைப்பில் நடைபெறும் 12-ஆவது இலத்தீன் அமெரிக்க அறிவியல் மற்றும் சமய மாநாட்டின் பொறுப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
“எதிர்நோக்கின் பாதையாக “இயற்கை புத்தகம்” பற்றிய அறிவியல், தத்துவ மற்றும் இறையியல் விளக்கவியல்” என்ற கருப்பொருளில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும், “அளவிடக்கூடிய எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து, அளவற்ற அளவைக் காணவேண்டும் என்றும், எண்ணற்ற எண்ணிக்கையைப் பற்றி சிந்திக்க அழைப்புவிடுக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.