கடவுளின் கண்களால் உலகத்தைப் பார்ப்பது இன்றியமையாதது
ஆழமாகக் கற்றல், உரையாடல், ஏழைகளைச் சந்தித்து அவர்களின் குரலுக்கு செவிசாய்த்தல் போன்றவை திருஅவைக்கும் மனித குலத்திற்கும் புதையல் போன்றவை என்றும், விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் ஆகியோரைக் கொண்ட உலகத்தைக் கடவுளின் கண்களால் பார்ப்பது இன்றியமையாதது என்றும் கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 17, சனிக்கிழமை திருப்பீடத்தில் Centesimus Annus என்ற பாப்பிறை ஆதரவு நிறுவனத்தைச் சார்ந்தவர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மின்னனுப் புரட்சியின் சூழலில், ஆய்ந்து அறியும் கல்வி கற்பிப்பதற்கான முறை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு, வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும், சோதனைகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் நம்மைச் சுற்றிலும் மிகக்குறைந்த உரையாடல்களே உள்ளன, கூச்சலிடும் வார்த்தைகள், போலிச் செய்திகள், பகுத்தறிவற்ற ஆய்வறிக்கைகள் நிறைந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்
உரையாடல் மற்றும் சந்திப்புக்களுடன் கூடிய உறவின் பாலங்களைக் கட்டுவோம், எப்போதும் அமைதியுடன் ஒரே மக்களாக இருக்க ஒன்றிணைவோம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அமைதி மற்றும் உரையாடலின் கருவியாகத் திகழும் உடன்பிறந்த உணர்வின் பாலங்களைக் கட்டுவோம் என்றும் எடுத்துரைத்தார்.
Comments are closed.