நம்மை இணைக்கும் உறவுகள் குறித்து சிந்திக்க வாய்ப்பு

மனிதர்களாகவும் அரசியல் சமூகங்களாகவும் நம்மை இணைத்து வைத்திருக்கும் உறவுகள் குறித்து நாம் மீண்டும் எண்ணிப் பார்ப்பதற்கு இந்த யூபிலி ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்தவரல்லாதவர்களுக்கும் ஒத்த வாய்ப்பை வழங்குவதாக இருக்கட்டும் என ஜனவரி 14ஆம் தேதியன்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட டுவிட்டர் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, நம்மை இணைத்து வைத்திருக்கும் உறவுகள் குறித்து எண்ணிப்பார்க்க இது ஒரு வாய்ப்பு என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளதுடன்,  நாம் அனைவரும் முரண்பாடுகளின் தர்க்கவாதத்தை வெற்றிகண்டு, சந்தித்து உரையாடலின் அறிவுவாதத்தை அரவணைப்போம், அது அமைதியான வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கம் கொண்டதாக இருக்கட்டும் என கூறியுள்ளார்.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் 5820 குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

Comments are closed.