மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக தற்போது மருதமடு அன்னை திருத்தல பரிபாலகராக பணியாற்றிவரும் அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு தொடக்கம் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் 76 வயதில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அம்மறைமாவட்டத்திற்கு மன்னார் மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் புதிய ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருத்தந்தையின் இந்நியமன செய்தி மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கென ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களினால் உத்தியோகபூர்வமாக இன்று மாலை வாசிக்கப்பட்டது.

புதிய ஆயராக நியமனம்பெற்ற அருட்தந்தை ஞானப்பிரசாகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் மன்னார் மறைமாவட்ட குருக்களிலிருந்து நியமனம்பெற்ற முதலாவது ஆயரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புதிய ஆயரின் பணி சிறப்பாக அமைவதற்கு தொடர்ந்து இறைவனிடம் மன்றாடுவோம்.

Comments are closed.