சமூக அதிசயத்தை ஆற்ற, கிறிஸ்துவின் இதயத்துடன் இணைவோம்
கிறிஸ்துவின் இதயம் என்பது திறந்த மனம், கொடை மற்றும் சந்திப்பை உள்ளடக்கியது என டிசம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுகிறிஸ்துவில் நாம், மற்றவர்களிடத்தில் முழுமையாகவும், மகிழ்ச்சி வழிகளிலும் தொடர்புகொள்ள கற்றுக்கொள்கிறோம் என தன் டுவிட்டர் செய்தியில் மேலும் கூறும் திருத்தந்தை, கிறிஸ்துவின் இதயத்துடன் இணைந்தால் நமது இதயங்கள் இந்த சமூக அதிசயத்தை ஆற்ற வல்லவை என தொடர்ந்து எழுதியுள்ளார்.
2012ஆம் ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் இதுவரை 5745 டுவிட்டர் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆங்கில மொழி டுவிட்டர் செய்திகளை இதுவரை 1 கோடியே 84 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
Comments are closed.