கடவுளோடும், பிற மனிதர்களோடும் பிணைப்பை ஏற்படுத்த உதவும் தூயஆவி
தூய ஆவியாரால் ஆயர் மாமன்றமானது வழிநடத்தப்படுகின்றது என்றும், நம்முடைய சகோதரரும் ஆண்டவருமான கிறிஸ்துவில் அனைவருடனும் இணைந்து பிணைப்பை ஏற்படுத்துவதை அவர் கவனித்துக்கொள்கிறார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 2 புதன்கிழமை வத்திக்கானின் ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற ஆயர் மாமன்றத்தின் 16 வது பொதுப்பேரவையின் இரண்டாவது அமர்வில் அதன் பங்கேற்பாளர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியானவர் நம் கண்ணீரை துடைத்து ஆறுதல் அளிக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.
தூயஆவியானவர் ஓர் உறுதியான வழிகாட்டி என்பதை புரிந்து கொள்வதும், அவருடைய குரலை பகுத்தறிவதைக் கற்றுக்கொள்வதுமே நமது முதல் பணி என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தூய ஆவி எல்லாவற்றிலும் எல்லாரிடமும் பேசுகிறார், இந்த ஒருங்கிணைந்த பயணச் செயல்முறையை அனுபவிக்கச் செய்கின்றார் என்றும் கூறினார்.
தூய ஆவியானவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். சோகம், அழுகை, ஆறுதல், அநீதிகள், தீமையை எதிர்க்கும் போது நல்லதை எதிர்க்கும் பிடிவாதம், மன்னிப்பதற்கான போராட்டம், அமைதியைத் தேடும் துணிவின்மை, விரக்தி, போன்ற எல்லா நிலைகளிலும் தூய ஆவியார் நம்முடன் இருக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Comments are closed.