கிறிஸ்து பிறப்பின் மகிழ்வில் வாழ்வோம் – திருத்தந்தை

கடவுள் மனிதனாக வந்ததன் மறைபொருளை அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு காலத்தில் ஒவ்வொருவரும் பிறருக்கு உதவிகள் பல செய்து,  கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை வாழ்வதற்கான வழிவகையை அறிந்து கொள்வோம் என்று தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 23 சனிக்கிழமை கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு இன்னும் ஒரே நாளே உள்ள நிலையில் தேவையிலிருப்பவர்களுக்கு உதவுவதன் அருளை இறைவனிடம் கேட்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் மனிதஉரு எடுத்து நம்மிடையே பிறந்து வந்த மறைபொருளை அதிகமாக சிந்தித்து தியானித்துக் கொண்டிருக்கும் இக்கிறிஸ்து பிறப்புக் காலகட்டத்தில், நமக்கு அடுத்திருப்பவர்கள், தேவையில் இருப்பவர்களுக்கு உதவுவதன் வழியாக ஒவ்வொருவரும் கிறிஸ்து பிறப்பின் மகிழ்வைக் கண்டறிந்து வாழ்வதற்கான வழிவகையை அறிந்து கொள்ள இறைவனின் அருளை வேண்டுவோம் என்று குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

Comments are closed.