நமக்காக நம்மைத் தேடி வரும் இயேசு

இயேசுவே நமது மீட்பர், அவர் நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை ஏற்க, நம்மைப் போலவே பிறந்து நமக்காக வருகின்றார் என்றும், நம்முடைய வறுமை, துன்பம், நிறை குறைகள் என வாழும் நமக்காக வருகின்றார் என்றும் டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 16 சனிக்கிழமை ஹேஸ்டாக் திருவருகைக் காலம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது தேவைகளை உணர்ந்து இயேசு நம்மைத் தேடி வருகின்றார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பராகிய இயேசு, வறுமை, துன்பம், நிறைகுறைகள் என நாம் இருக்கும் நிலையிலேயே நம்மை நாடி வருகின்றார் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக நமது தேவைகளாகிய  நாம் மீண்டு எழும்பப்படவும், மன்னிக்கப்படவும், மீட்கப்படவும் நம்மைப் போல நமக்காக வருகின்றார் என்றும் தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.