வன்கொடுமை சமூகத்தின் நச்சுத்தன்மையுள்ள களை

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை என்பது நாம் வாழ்கின்ற சமூகத்தை ஆட்டிப்படைக்கின்ற ஒரு  கொடிய நச்சுத்தன்மையுள்ள களை என்றும், அது சமூகத்தின் வேர்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும், தன் குறுஞ்செய்தி வழியாக வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

நவம்பர் 25 சனிக்கிழமை சிறப்பிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பன்னாட்டு நாளை முன்னிட்டு இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சமூகத்தின் மிகக்கொடுமையான களைகள் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, முன்தீர்மானம் அநீதி, வேறுபாடு போன்றவற்றை வளர்க்கும் இக்களைகள் அதன் வேரோடு பிடுங்கி எறியப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த  நச்சுத்தன்மையுள்ள வேர்கள்,  மனித மாண்பை தங்களது வாழ்வின் மையத்தில் வைத்திருக்கும் கல்வி நடவடிக்கைகளால் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.