இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 02.11.2023

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

செபமாலை மாதமான இம்மாதத்தின் 31-ம் நாளான இன்று இயேசுவின் இறையாட்சியின் மகத்துவத்தை இப்பூவுலகில் இருக்கும் நாள்களிலேயே நாம் உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

“இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன்.” என புனித பவுலடியார் இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார்.

வாழ்வின் துன்ப நாள்களில் நாம் பொறுமையோடும், விசுவாசத்துடனும் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

வெறும் தண்ணீரையும், காய்கறிகளையும் உணவாக உட்கொண்டு, குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்ட குருவாக இல்லாதிருந்தும் சிறந்த மறைபணியாளராக விளங்கிய இன்றைய அருளாளர் புஃளோரன்ஸ் நகர தாமஸிடமிருந்து நற்செய்தி அறிவிக்கும் ஆர்வத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

இந்த அக்டோபர் மாதம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.