இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைத் தூய ஆவியின் துணைகொண்டு வழி நடத்திய நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
அனுதினமும் அதிகாலையில் அன்றைய தினத்தின் நமது எண்ணம், பேச்சு, செயல் ஆகியவற்றில் தூய ஆவியானவரின் வழிநடத்துதல் கிடைக்க வேண்டி அவரது துணையினை நாட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
குடும்ப அமைதி, சமாதானம், குடும்ப முன்னேற்றம் ஆகியவற்றிற்கு குடும்ப செபமாலை மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து அனுதினமும் குடும்ப செபமாலையை தொய்வில்லாமல் இல்லங்களில் செபிக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நாம் நிதானமாக பொருள் உணர்ந்து செபிக்கும் செபமாலையின் ஒவ்வொரு மணியிலும் சொல்லும் ‘அருள் நிறைந்த மரியே வாழ்க’ செபமானது, ஒரு ரோஜா மலரை வான தூதர்கள் வாயிலாக விண்ணகத்தில் நம் அன்னை மரியாளிடம் கொண்டுபோய் சேர்ப்பிக்கிறது என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
நாளை ஞாயிற்றுக் கிழமை முழுத் திருப்பலியில் நாம் ஆண்டவரின் திருவுடலை பெற தகுதிபெறும் பொருட்டு நம்மையே நாம் முழுமையாகத் தாயாரித்துக் கொள்ள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.