இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைத் தூய ஆவியின் துணைகொண்டு வழி நடத்திய நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “எதிர்நோக்கை இழந்துவிடாமல் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அதில் உறுதியாக நிலைத்திருங்கள்.” என புனித பவுலடியார் கூறுகிறார்.
எந்த சூழ்நிலையிலும் நாம் விசுவாசத்தில் வழுவாது இருக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
அடிமைகளை மீட்பதிலும், அவர்களுக்கு சேவை புரிவதையும் தன் வாழ் நாள் எல்லாம் பாடுபட்ட இன்றைய புனிதர் புனித பீட்டர் கிளேவர் ஏறக்குறைய 3 இலட்சம் அடிமைகளுக்கு திருமுழுக்கு வழங்கினார்.
குடும்பங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் அடக்கு முறையினால் அடிமைத்தனத்தில் சிக்குண்ட எண்ணற்ற மக்களின் விடுதலைக்காக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
கர்நாடகாவில் குறிப்பாக காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னும் அதிகமான தென் மேற்கு பருவ மழை பெய்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
நாளை ஞாயிறுக் கிழமை முழுத் திருப்பலியில் நாம் ஆண்டவரின் திருவுடலை பெற தகுதிபெறும் பொருட்டு நம்மையே நாம் முழுமையாகத் தாயாரித்துக் கொள்ள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.