இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
கபிரியல் அதிதூதர் மூலம் அன்னை மரியாளை, மனிதகுல மீட்புத் திட்டத்திற்கு பயன்படுத்தி நம் அனைவருக்கும் அவரை எக்காலத்துக்கும் அன்னையாகத் தந்த நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
எலிசபெத்து அம்மாளுக்கு உதவி செய்த நம் அன்னை மரியாளிடமிருந்து பிறரன்பு சேவையை நாம் கற்று நம் வாழ்வில் அதை முழு உள்ளத்தோடு செயல்படுத்திட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றைய நற்செய்தி வாசகத்தில், “உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை.” என வானதூதர் கூறியதை நாம் வாசித்தோம்.
இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை என்ற உண்மையை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த ஆண்டு இறைவன் நமக்கு நல்ல பருவ மழையைத் தந்தருள வேண்டி நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய்க் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.