இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
மகிமை நிறை மறையுண்மைகள்.
*1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 103:3-ல்,
*”அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.”* என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
எல்லாம் வல்ல இறைவன் நம் பாவக்கறைகளை நம்மிடம் இருந்து அகற்றி நம்மை நோய்களிலிருந்து குணமாக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்தியில் தந்தையாகிய கடவுள் குழந்தைகளுக்கு ஞானத்தை வெளிப்படுத்தியதற்காக இயேசு போற்றுகின்றார். ஆம், கடவுள் எளியவர்களின் கடவுள், அவர்களோடு என்றும் உடனிருக்கும் கடவுள். அவரை மட்டும் நாம் நம்பி வாழ்ந்து, அவரது ஆசியைப் பெற இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,*
இன்றைய நாள் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் நாம் ஞானத்தோடு செயல்பட தூய ஆவியானவரின் துணையை நாடி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,*
தனது வாழ்வில் கடுமையான சுய ஒழுக்கத்தையும், புனிதத்தன்மையையும் கடைபிடித்தவர் இன்றைய புனிதர் புனித மேக்ரீனா.
?
சிறந்த ஒழுக்கத்தையும், தூய்மைத்தன்மையையும் புனித மேக்ரீனாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,*
புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை இதற்காக ஒப்புக் கொடுப்போம்.
*ஆமென்.*
Comments are closed.