அன்பு பொங்க, ஆசைகள் பொங்க இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!
உழவர்கள் தைப்பொங்கல் திருநாளில் தமது வேளாண்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். உங்கள் அனைவருக்கும் தட்ஸ் தமிழ் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உழவர்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இந்த தைப்பொங்கலை நாம் கொண்டாடி வருகிறோம். இது தமிழர்களின் சிறப்பு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் திருவிழா நாளை தொடங்குகிறது. முதல் பண்டிகையாக போகி தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என வரிசைக் கட்டி வரும் பண்டிகைக்கு வாழ்த்துகளை பரிமாறுவது இயல்பான ஒன்று.
Comments are closed.