நம்பிக்கையை வளர்க்கும் தினசரி செபம் – திருத்தந்தை

கடவுளுக்கென்று நாம் ஒதுக்கும் நேரமாகிய தினசரி செபத்தினால் கடவுள் நம் வாழ்விற்குள் நுழைய முடியும் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி, 13 வெள்ளிக்கிழமை  #செபம் என்ற ஹாஸ்டாக்குடன், தினசரி செபத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அனுப்பியுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தினசரி செபத்தினால் நமது இதயங்கள் திறக்கப்பட்டு, கடவுளின் அன்பு நம்மில் நிரப்பப்படும் எனவும், இதனால்  நமது நம்பிக்கை வளர்க்கப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுளுக்கு என்று ஒதுக்கப்பட்ட தினசரி செபம் நமது வாழ்வில் கட்டாயம் தேவை. இதன் வழியாக அவர்  நமது  வாழ்வில் நுழைந்து, நமது இதயங்களைத் திறந்து, அன்பினால் நம்மை தினசரி நிரப்புவதால் நமது நம்பிக்கை வளர்க்கப்படுகின்றது என்பதை திருத்தந்தையின் குறுஞ்செய்தி உணர்த்துகிறது.

Comments are closed.