இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
புனித மாசில்லாக் குழந்தைகளின் நினைவுநாளைக் கொண்டாடுகின்ற இந்த நாளில், நாம் குழந்தைகளைப் போல கள்ளம் கபடற்ற மாசில்லா தூய மனதினைக் கொண்டிருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
சாத்தானின் தீச்செயல்களில் ஒன்றான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகளில் இருந்து அனைத்து குழந்தைகளையும் நம் இறைவன் காப்பாற்ற வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
தூய ஆவியானவர் நம் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல ஞானத்தைத் தந்தருள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
தீராத நோயினால் அவதியுரும் அனைத்துக் குழந்தைகளையும் இறைவன் தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!
Comments are closed.