இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
திருப்பாடல் (25:6)-ல்,
“ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.” என கூறப்பட்டுள்ளது.
இந்த திருவருகைக் காலத்தில் நமது பாவங்களுக்கு மனம் வருந்தி இறைவனின் இரக்கப்பெருக்கத்தை நாடி நல்லதொரு ஒப்புரவு அருட்சாதனத்தை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டி இந்த முதலாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். என்பதை நாம் வாசித்தோம்.
இறைவனின் திருவுளத்திற்கு நாம் என்றும் அடிபணிந்து நடந்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இந்த திருவருகைக் காலத்தில் நமது உணவு, உடைகளை இல்லாதவரோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
நமது உள்ளத்திலும், இல்லத்திலும் பிறக்க இருக்கும் இயேசு பாலனை வரவேற்க இந்த திருவருகைக் காலத்தில் நம்மையே நாம் முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!
Comments are closed.