மாற்றுத்திறனாளிகள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் – திருத்தந்தை

ஒவ்வொரு நபரின் மாண்பை அங்கீகரிப்பது திருஅவையின் நிலையான பொறுப்பாகும் எனவும், மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்தியும், குடும்ப வாழ்வு என்ற தலைப்பில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 03 சனிக்கிழமை வத்திக்கானின் புனித கிளமெந்தினா அறையில் மாற்றுத்திறனாளிகள் ஏறக்குறைய 100 பேரை சந்தித்து மகிழ்ந்த திருத்தந்தை அவர்கள், அனைத்து மக்களாலும் மாற்றுத்திறனாளிகள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்று தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

ஒவ்வொரு நபரின் மாண்பை அங்கீகரிப்பது திருஅவையின் நிலையான பொறுப்பாகும்: இது ஒவ்வொருவருக்கும், குறிப்பாக மிகவும் பலவீனமான மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நெருக்கத்தை காலப்போக்கில் தொடரும் பணியாகும் என்று வலியுறுத்திய  திருத்தந்தை பிரான்சிஸ்,

Comments are closed.