பத்தாவத்தை புனித பிலிப்பு நேரியார் ஆலயம் அழகிய தோற்றதத்துடன் புனரமைக்கப்பட்டு யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்களால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது

இளவாலை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள யாகப்பர் பங்கிற்குட்பட்ட பத்தாவத்தை புனித பிலிப்பு நேரியார் ஆலயம் அழகிய தோற்றதத்துடன் புனரமைக்கப்பட்டு 25ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழாவை தொடர்ந்து திருநாளுக்கு ஆயத்தமான நற்கருணை விழாத் திருப்பலியை ஆயர் அவர்கள் தலைமை தாங்கி ஓப்புக்கொடுத்தார்.
1700 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ்வூரை சேர்ந்த பாவிலுப்பிள்ளை என்பவரால் மண்ணால் கட்டப்பட்ட இவ்வாலயம் 1852 ஆம் ஆண்டு அருட்தந்தை எர்மினியோ குய்டி அவர்களால் கல்லால் கட்டப்பட்டு, பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.
இறுதியாக 2019ஆம் ஆண்டு யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு அருட்தந்தை எட்விநாதன் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் பங்கு மக்களின் நிதி பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் நிறைவடைந்து தற்போது இவ்வாலயம் புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Comments are closed.