இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.” என திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்.
பிறருடைய துன்பங்களை நம்முடைய துன்பங்களாக எண்ணி அவர்களுக்காக நாம் இறைவேண்டல் செய்ய இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்குள் நுழையமாட்டார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இறையாட்சியை ஐயமின்றி ஏற்றுக் கொள்ளும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
அருட் சகோதரியும், செவிலியருமான இன்றைய புனிதர் மரிய பெர்டில்லா நோயுற்ற குழந்தைகளுக்கு முழு அர்ப்பணிப்போடு சிறந்த சேவை செய்தவராவார்.
நோயுற்ற குழந்தைகள் நலம்பெற இப்புனிதர் வழியாக நாம் இறைவனிடம் வேண்டுவோம். அக்குழந்தைகள் பூரண சுகம் பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் எண்ணற்ற வெளிநாட்டினர் பத்திரமாக தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பவும், அமைதிக்கான பேச்சு வார்த்தைகள் மூலம் உக்ரைன் யுத்தம் விரைவில் முடிவுக்கு வரவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.