உலக ஆயர் மாமன்றத்தின் 15வது பொது அவை

ஒரு திருப்பயணியாக உலகம்  முழுவதும் திருஅவை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துத் தயாரிக்கப்பட்ட ஆயர் பேரவையின் அறிக்கைகளை அண்மையில் கூடி நிகழ்நிலை வலைதள தொடர்பு வழி விவாதித்துள்ளது உலக ஆயர் மாமன்றத்தின் 15வது பொது அவை.

‘திருப்பயணியாகத் திருஅவை’ என்ற திட்டம் துவக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பின் கூடியுள்ள இவ்வவைக் கூட்டம், உலகம் முழுவதும் தலத்திருஅவைகளில் இது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக உள்ளதாகத் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.

ஒரு திருப்பயணியாகத் திருஅவை முழுவதும் இணைந்து நடைபோடுவதற்கு உதவும் வகையில், உலக ஆயர் மாமன்றத்தின் வழியாகத் திருத்தந்தை துவக்கி வைத்த இந்த முயற்சியில், உலகின் 98 விழுக்காட்டு ஆயர் பேரவைகளும், கீழை வழிபாட்டுமுறை ஆயர் மன்றங்களும் அதற்கென அதிகாரி ஒருவரை நியமித்து செயல்படத்  துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலரால் வெளியிடப்பட்ட ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பலவும் தலத் திருஅவைகளின் அப்பகுதி மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி சிறப்புடன் இடம்பெற்று வருவதாகவும், கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூறுகள் இம்முயற்சிகளில் நன்முறைகளில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிப்படுள்ளது.

தங்கள் கருத்துக்கள் நன்முறையில் ஏற்கப்படுமா எனப் பொதுநிலையினரிடையே காணப்படும் அச்சம், பெருந்தொற்று பரவல், இளையோருக்கு உரிய இடமளித்தல், சில அருள்பணியாளர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற சவால்களையும், விவாதித்துள்ளது உலக ஆயர் மாமன்றத்தின் 15வது பொது அவை.

Comments are closed.