பிறரன்பை பேண அழைக்கும் திருத்தந்தை
மகிழ்ச்சியின்மை உருவாவதற்குக் காரணமே பிறரன்பு இன்மையே’ என, ஜனவரி 15, சனிக்கிழமையன்று டுவிட்டர் செய்தியில் கருத்து வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘பிறரன்பு இன்மையே மகிழ்ச்சியின்மை உருவாவதற்குக் காரணமாகிறது. ஏனென்றால், அன்பு மட்டுமே மனித இதயத்திற்கு நிறைவைத் தர முடியும்’ என்கிறது திருத்தந்தையின் டிவிட்டர் செய்தி.
மேலும் சனிக்கிழமையன்று, ஆயர்களுக்கான திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Ouellet, திருஅவை நடவடிக்கைகளுக்கான அவையின் தலைவர் அருள்பணி Jesús Hernández Martín ஆகியோரைச் சந்தித்தார்.
அதேநாளில், NIcaragua நாட்டிற்கான திருப்பீடத்தூதர் Waldemar Stanisław Sommertag, பெல்ஜியம் மற்றும் இலக்சம்பர்க் நாடுகளுக்கான திருப்பீடத்தூதர், பேராயர் Franco Coppola, ஆப்ரிக்க ஒன்றியத்திற்கான திருப்பீடச் சிறப்பு பிரதிநிதியும், எத்தியோப்பியா நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதியுமான பேராயர் Antoine Camilleri ஆகியோரையும் சந்தித்து உரையாடிய பின்னர் Teatini துறவு சபையின் அங்கத்தினர்களையும் சந்தித்து உரை ஒன்றும் வழங்கினார்.
Comments are closed.