அன்பிய வளவாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு

 

அன்பிய யுபிலி ஆண்டின் முக்கிய நிகழ்வான யாழ் மறைமாவட்ட அன்பிய வளவாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு 11ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மறைமாவட்ட  கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனரும் இலங்கை கிளரீசியின் சபையின் துணை முதல்வருமான அருட்திரு மில்பர்
வாஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர்; பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். கடந்த 11 மாதங்களாக ஆறு மறைக்கோட்டங்களிலும் நடைபெற்ற அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடலில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட வளவாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களிலிருந்து யாழ் மறைமாவட்ட வளவாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் கடந்த காலங்களில் அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாடம்டில் நடந்த அன்பிய யுபிலி ஆண்டிற்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Comments are closed.