உலக ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புத் திருப்பலியில் மறையுரை
செவிமடுத்தல்
இறைவனையும், மனிதர்களையும் சந்திப்பதற்கு மிக முக்கியமான தேவை, செவிமடுக்கும் பண்பு என்பதை, தன் இரண்டாவது கருத்தாகக் கூறியத் திருத்தந்தை, எவ்வித முற்சார்பு எண்ணங்களும் இன்றி, திறந்த உள்ளத்துடன் செவிமடுப்பது, உண்மையிலேயே, திருஅவைக்கு மிகவும் தேவையான ஒரு பண்பு என்று கூறினார்.
ஒவ்வொரு தலத்திருஅவையிலிருந்தும் கேட்கப்படும் கேள்விகள், உணர்த்தப்படும் கவலைகள், மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு செவிமடுப்பது இந்த மாமன்றத்தின் முக்கிய தயாரிப்பாக இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை, தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.
தெளிந்து தேர்தல்
சந்தித்தல் மற்றும் செவிமடுத்தல் என்ற இரு நிலைகளும், தன்னிலேயே முடிவுகள் அல்ல, மாறாக, அவற்றின் வழியே, அனைவரும் இணைந்து, சரியான தெரிவுகளை மேற்கொள்ள தெளிவுகள் உருவாகவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
தன்னைச் சந்திக்க வந்த செல்வந்தரிடம், இயேசு, ஓர் ஆன்ம ஆய்வை மேற்கொள்ளச் சொன்னார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இவ்வுலக செல்வங்களிலிருந்து விடுதலை பெறுவதற்கு, செல்வந்தரை அழைத்ததுபோல், திருஅவையையும் இறைவன் அழைக்கிறார் என்று கூறினார்.
அடுத்துவரும் ஈராண்டுகள் நடைபெறும் இந்த ஒருங்கிணைந்த பயணத்தில், திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து, தூய ஆவியாரின் வழிநடத்துதலை கண்டுணர்ந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ள இறையருளை இறைஞ்சுவோம் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் மறையுரையை நிறைவுசெய்தார்.
Comments are closed.