இறைவன் முன் நம்மை திறப்பதே, செபிப்பதில் சிறந்த முறை
ஞாயிற்றுக்கிழமையன்று, அன்னமரியாவின் விண்ணேற்பு பெருவிழா சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவைப்போல், திறந்த்தொரு மனநிலையுடன் இறைவன் முன் நம்மை ஒப்படைப்பதுபோல் சிறந்த இறைவேண்டல் வேறு இல்லை, ‘இறைவா உமக்கு என்ன வேண்டும், எப்போது வேண்டும், அது எவ்விதம் வேண்டும்’ என நம் இதயத்தை இறைவன் முன் திறப்போம், என இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
ஆகஸ்ட் 14, இச்சனிக்கிழமை முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3,359 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன
Comments are closed.