இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
”இறைவார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதில் எத்துணை உறுதியாய் இருக்கவேண்டும் என்பதைப் புனித கன்னி மரியாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
நம் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு நாளில் நாமும் நமது அன்னையைப் போல இறைவார்த்தையைக் கடைபிடிப்பதில் உறுதியுடன் திகழ வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இந்திய தேசத்தின் 75-வது சுதந்திர நாளில் நாட்டு ஒற்றுமைக்காகவும், தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்படவும், நாட்டின் பொருளாதார நிலை உயரவும், உண்மையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவும் இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
வார இறுதி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நமது ஆலயங்களில் மீண்டும் திருப்பலி நிறைவேற்றிட அரசு அனுமதிக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இறைப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள் மற்றும் கன்னியர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
அடக்கத் திருப்பலி இல்லாமல் தொற்று காலத்தில் மரித்த அனைத்து ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.