இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 103:3-ல்,
“அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
எல்லாம் வல்ல இறைவன் நம் பாவக்கறைகளை நம்மிடம் இருந்து அகற்றி நம்மை நோய்களிலிருந்து குணமாக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில் இயேசு, தந்தைக் கடவுள் குழந்தைகளுக்கு ஞானத்தை வெளிப்படுத்தியதற்காக அவரைப் போற்றுகின்றார். ஆம், கடவுள் எளியவர்களின் கடவுள், அவர்களோடு என்றும் உடனிருக்கும் கடவுள். அப்படிப்பட்டவரை நாம் நம்பி வாழ்ந்து, அவரது ஆசியைப் பெற இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய நாள் முழுவதும் நமது பேச்சிலும், செயலிலும் நாம் ஞானத்தோடு செயல்பட தூய ஆவியானவரின் துணையை நாடி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
அனைவருக்கும் அச்சத்தை உண்டாக்கி இருக்கும் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை மக்களை அதிகம் பாதிக்காத வகையில் இருக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இவ்வாண்டு விவசாயிகள் எதிர்பார்க்கும் பருவமழை நன்கு பெய்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
May be an image of 2 people and flower
Prince Selvakumar and 63 others
11 Comments
13 Shares
Like

Comment
Share

Comments are closed.