இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
பிறந்த இந்த ஜுன் மாதத்தில் நம் குடும்பத்தையும், நமது தேசத்தையும் இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புக் கொடுத்து செபிப்போம். இம்மாதம் முழுவதும் நம் இறைவன் நம்மைக் காத்து வழிநடத்திடவும், ஆசீர்வாதங்களை நம் வாழ்வில் பொழியவும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
கடந்த சில நாள்களாக கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை குறைந்து வருகிறது. நமது அனைவரின் வேண்டுதல்களை செவிமடுத்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
புதிதாகப் பரவிவரும் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய்கள் மேலும் பரவாமல் முற்றிலுமாகக் குறைந்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
கொரோனா நோயின் நிமித்தம் உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய கல்லறைத் தோட்டங்களில் போதிய இடம் கிடைத்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.