இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 21.05.2021 இன்று விஷேசமாக அனைத்து சமூக ஆர்வலர்களுக்காகவும் முக்கியமாக தங்களது சமூகப்பணியின் நிமித்தம் தொற்று நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி அவதியுரும் அனைத்து சமூக ஆர்வலர்களும், அவர்களது குடும்பத்தினரும் பரிபூரண சுகம் பெற்றிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்காகவும், நோய் சிகிச்சைக்கு செலவிட்டதால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான அனைத்து குடும்பங்களுக்காகவும் இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
தொற்று நோயினால் குடும்பத் தலைவரையோ, குடும்பத் தலைவியையோ இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்காகவும், முக்கியமாக அவர்கள் அந்த அதிர்ச்சியிலும், துக்கத்திலும் இருந்து விரைவில் மீண்டுவர இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.