இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 20.05.2021 இன்று விஷேசமாக அனைத்து மருந்தாளுநர்களுக்கும், சுகதாரப் பணியாளர்களுக்காகவும் செபிப்போம். முக்கியமாக இவர்களின் பணியின் நிமித்தம் இத்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரும் பரிபூரண சுகம்பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
நோய்த் தொற்றின் காரணமாக அரசினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விதிகளை மக்கள் ஒழுங்காகக் கடைபிடித்து நோய் பரவலை நன்கு குறைத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
கொரோனா தொற்றுக் கொண்டவர்களுக்கு தேவையான மருந்து, ஆக்ஸிஜன் மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் குறைவின்றிக் கிடைத்திட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இந்தியாவில் மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்குள் வர வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
பொது மக்களிடையே கொரோனா தொற்றுத் தடுப்பூசியை பற்றிய அச்சம் அகன்று அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டிய துணிவினை மக்களுக்கு இறைவன் அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.