இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 16.05.2021 இன்று, விஷேசமாக வன்முறை மற்றும் மனிதக் கடத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிராத்திப்போம். முக்கியமாக அவர்களில் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளான அனைவரும் பரிபூரண சுகம்பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
விண்ணேற்றம் அடைந்த இயேசு தந்தையின் வலப்பக்கம் இருந்து நமக்காகப் பரிந்து பேசுவார்; துணையாளர் வருவார் என்ற இரண்டு நம்பிக்கைச் செய்திகளை இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா நமக்குத் தருகின்றது.
நமக்குப் பரிந்து பேசுவதற்காகவும், நமக்குத் துணையாளரைத் தந்தமைக்காகவும் நமதாண்டவர் இயேசுவுக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
நமக்குத் துணையாளராக வந்த தூய ஆவிக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகத்தில், ““உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.” என இயேசு கூறுகிறார்.
ஆண்டவருக்கு உகந்த நமது தூய வாழ்க்கையின் வழியாக பிறருக்கு நாம் நற்செய்தியாக வாழ்ந்து காட்டிட இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் எண்ணற்ற நோயாளிகள் குணமடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.