இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 09.05.2021 இன்று, விஷேசமாக அனைத்து முதியவர்களுக்காகவும், முக்கியமாக தொற்று குறித்த அச்சத்தில் இருக்கும் பெரியவர்களின் மனபயத்தை இறைவன் அகற்றிடவும், மேலும் தொற்று பாதித்த பெரியவர்கள் பரிபூரண சுகம் பெறவும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
அன்னையர் தினமாகிய இன்று ஒரு நாள் மட்டும் அன்னையர்களை மகிழ்விப்பதும், வாழ்த்துவதோடு மட்டும் இல்லாமல் வருடம் முழுவதும் அவர்களுக்கு மன அமைதியையும், அன்பையும், சந்தோஷத்தையும் நாம் அளித்திட உறுதி ஏற்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படவும், சமூக இடைவெளி மற்றும் அரசின் ஒழுங்கு முறைகளை தவறாது கடைபிடிக்கவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
கொரோனா தொற்று நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதி, மருந்து, பிராண வாயு மற்றும் இதர மருத்துவ சிகிச்சைகள் தடையின்றிக் கிடைத்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் எண்ணற்ற நோயாளிகள் குணமடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.