அதி.வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை உடல் யாழ்.மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்து இன்று வெள்ளிவிழாக் காண்கிறார். இவர் மன்னார் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திருநிலைப்படுத்தப்பட்டார்.இந்தியாவில் இருந்து பல புதிய பெண் துறவற சபைகளை மன்னார் மறைமாவட்டத்திற்கு வரவழைத்து இந்திய அருட்சகோதரிகளின் பணியை மக்கள் பெற வழிவகுத்தார். மடுத்திருப்பதியில் தியான இல்லம் ஒன்றைக் கட்டியெழுப்பி அதன் மூலம் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய மறைமாவட்டத்தவர்களும் பயன்பெற வழிகோலினார்.
Comments are closed.