குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரிகள் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இறைவனுக்கு உகந்த காரியங்களில் நாம் ஈடுபடும் போதெல்லாம் இறைவன் நம் பக்கம் இருக்கின்றார். நமக்கு எதிரான சூழ்நிலைகளில், இறைவன் நமக்கு ஞானத்தையும், நாவன்மையும் தந்தருள இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தியில்
“என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்.” என இயேசு கூறுகிறார். எந்த நிலையிலும் நாம் மன உறுதியோடு இருந்து விசுவாசத்தைக் காத்துக் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்று தமிழகம் எதிர் கொள்ள இருக்கும் ‘நிவர்’ புயலினால் உண்டாகும் பெரும் பாதிப்புகளில் இருந்து மக்களை இறைவன் பாதுகாத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த நேரத்தில் உணவு, குடி நீர் மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் கிடைத்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய எண்ணற்ற மக்களின் உடல் பலகீனத்தை, இறைவன் அகற்றி, அவர்கள் அன்றாட பணிகளை மறுபடியும் திறம்பட செய்ய இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.