அமரர் ச.சூசைப்பிள்ளை ஆசான் நினைவாக (பப்பா)

சூசைப்பிள்ளை மாஸ்டர் சூசையப்பர் போல் சுத்தமான மனிதன்
அடைக்கல அன்னைக்கு அடுத்ததாக எம்மை தேடிவந்த தேவர் மகன்!!
கோயில் வேலை என்றால் குதூகலமாய் சேவை செய்வார்
கோடான கோடி புண்ணியத்தின் சொந்தக்காரர்!!
ஏழைகள் இவர் மனதில் எப்போதும் ஊஞ்சல் கட்டி அடினார்கள் அன்று
அதனால் அவர்கள் மனதில் இவர் ஊஞ்சல் ஆடுகிறார் இன்று!!
நந்தியாவட்டை பூ வளர்த்து நற்கருணை
பெண்களுக்கு முடி சூட்டிய முடிச்சோழன்!!
மனிதர்களில் ஒருவனாம் மகத்தான கடவுளாம் – ‍‍மறை ஆசான்
மறை போதித்த மகான் மறக்காமல் நினைக்கிறார்கள் இவர் மாண்பு வென்று!!
பூப்பந்தாட்டத்தை உன் பூந்தோட்டத்தில் அமைத்து
எம் மைந்தரை மாவட்ட சம்பியன் ஆக்கி மகிழ்ந்த மணியரசன்!!
தன்செலவில் ஆடை தைத்து அழகுபார்த்து
அருட்சாதனம் முதல் நன்மை கொடுக்கும் ஆனையூர் பப்பா!!
சகடையை அலங்கரித்து என் அடைக்கல தாயை அதில் ஏற்றி
ஊரை சுற்றிக்காட்டிய சுந்தரேசன்!!
ஏழை விறகைச் சிக்கனமாக்க இலவச சூட்டடுப்பு தயாரித்து
கொடுக்கும் பாமரனின் பொறியியலாளன்!!
பள்ளி பிள்ளைகளை தயார்படுத்தி இறுதிச்சடங்கில்
இலவசமாக பாண்ட் இசை இசைக்கும் மரியாதையின் மகுடம்!!
மணவறைகளை இலவசமாய் செய்து மணமக்களை அழகு பார்த்த
மதுரை பெரும் புலவன் நாச்சியார்!!
நீங்கள் வகுப்பறையில் வறுத்தெடுத்த மாணவன் பலர்
பட்டம் பெற்று பார் ஆழ்கிறார்கள் இன்று உலகில்!!
போதும் ஜயா ஏழைகளின் எல்லை சாமி நீர் செய்த சேவைகள்
மறதி கொண்ட மாக்கள் நாம் மறந்து விட்டோம் மன்னித்து விடும் அப்பனே!!
வாழ்த்துகிறேன் இறந்த பின்னும் வாழுகின்றீர் ஊர் நெஞ்சில்
வாரும் ஜயா மீண்டும் ஒருமுறை ஏழைகள் நமக்காக ஆனையூர் மண்ணுக்கு!!
              தமிழ் புரவலன் ஆனையூரான்
———————————

Comments are closed.