இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள். 17.05.2020

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் வருகின்ற சூழ்நிலையில் நோய்த் தொற்று வேகம் இன்னும் அதிகரிக்காமல் இருக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தொற்று பரவும் வேகம் நன்கு குறைய இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
சொந்த ஊருக்கு நடந்து செல்லும் பல்லாயிரக் கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சிரமமின்றி தங்கள் இல்லங்கள் திரும்ப இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றின் நிமித்தம் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளும் பரிபூரண சுகம் பெற்றிட இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இன்றைய நாள்களில் வருமானம் இல்லாமல் ஏழ்மையில் தவிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் இறைவன் நல்லதொரு வழியைக் காட்டிட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.