ஈழத் தமிழர்களை கலங்க வைத்த அருட்தந்தை பெஞ்சமின்

மட்டக்களப்பு மண்ணின் மீது தீராத பற்றுக் கொண்ட புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலரின் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அன்பை நேசிக்கும் அனைவரையும் கண்ணீர் கடலில் மூழ்கடிக்கச் செய்திருக்கிறது.

ஏழு தசாப்தங்களாக வாழ்ந்து, மக்களுக்கு தொண்டூழியம் செய்து வந்த, அமெரிக்காவைச் சேர்ந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹென்றி மில்லர், 94ஆவது வயதில், செவ்வாய்க்கிழமை, புத்தாண்டு அன்று இறைபதம் அடைந்தார்.தனது 21வது வயதில் மட்டக்களப்பையடைந்த அவர் தன் இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் அந்த மண்ணைவிட்டு நீங்கவில்லை.

 

போர்க் காலத்திலும், தான் காலடியெடுத்து வைத்த நிலத்திலேயே தங்கி அம்மண்ணுக்காகவும் அந்த மக்களிற்காகவும் தன்னுடைய வாழ்க்கையை இறையன்போடும் இறை பணியோடும் அர்ப்பணித்திருந்தவர் பெஞ்சமின் ஹரி மிலர்.

இதேவேளை, போர் மேகங்கள் சூழப்பட்ட காலத்தில் சமாதானக் குழுவினூடாக அருட்தந்தை மில்லர் ஆற்றிய பணிகள் நேர்மறையானவையாகும். அப்போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பொதுமக்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டமை, இராணுவத்தினர் கைது செய்து கொண்டு சென்றவர்களைக் கண்டுபிடிக்க உதவியமை, யுத்தத்தின் போது இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இயங்கியமை என, அருட்தந்தை மில்லரின் பணிகள் பரந்து விரிந்தவையாக இருந்ததன

Comments are closed.