30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ! 368 பேர் கொரோனா

வெலிசறை கடற்படை முகாமில் 30 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிதுள்ள நிலையில் தற்போது இலங்கையில் 368 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவையைச் சேர்ந்த மாலுமி உட்பட வெலிசறை கடற்படை முகாமில் உள்ள 30 கடற்படை வீரர்கள், கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

இந்நிலையில், வெலிசறை  கடற்படை முகாமை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவையில் இருந்து நேற்று ஒரு நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து கடற்படை வீரர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதை தொடந்தே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின்  எண்ணிக்கை 368 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில், இன்று மாத்திரம் புதிய கொரோனா தொற்றாளர்கள் 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 254 பேர் வைத்திசாலையில் தங்கி சிகிச்சைபெற்றுவருகின்றதுடன் 107 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையைவிட்டு வெளியேறியுள்ளனர்.

Comments are closed.