கொரோனாவிற்கான தடுப்பு ஊசி எப்போது வெளிவரும்? உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்

கொரோனா வைரசுக்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் பல நாடுகளை பாதித்துவருகின்றது.

தற்போதுவரை 210 இற்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளதுடன் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலியெடுத்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஆரிப் கூறியதாவது:-

கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் சோதனை பல நாடுகளில் ஆய்வு கட்டத்திலேயே உள்ளது. இதனால் தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகலாம். உலக அளவில் கொரோனா வைரஸ் 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.

இத்தாலி, ஸ்பெயினில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இங்கிலாந்து, துருக்கியில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.