இன்று முதல் மறு அறிவித்தல் வரை வழிபாடுகள் இடம்பெறாது- யாழ் குருமுதல்வர்

கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (மார்ச் 16) திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வழிபாடுகள் இடம்பெறாது” என்று கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்ப்பாணம் குருமுதல்வர் ஜோசப் தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் அறிவித்துள்ளார்.

கோரோனா வைரஸ் பரவலை  கட்டுப்படுத்த நாட்டில் முன்னெடுக்கும் தேசிய திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் கத்தோலிக்க பெருமக்கள் தமது வீடுகளிலிருந்து வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டார்

Comments are closed.