தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனையைத் தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

அனைத்து தேவாலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை வரும் மார்ச் 31ஆம் திகதிவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று அச்சநிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்படுமாறும் அவர் கேட்டுள்ளார்.

இதேவேளை, பொது நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை இரண்டு வாரங்களுக்கு தடை செய்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.