யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைளை பிரசவித்த இளம் தாய்! மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பத்தினர்
தனது முதலாவது பிரசவத்தின்போது, தாயொருவர், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பிரசவித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கிருஷ்ண பவன் கீர்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு 4 குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
குழந்தை பிரசவத்திற்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் , அதன் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்றாம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் அவர் பெற்றெடுத்துள்ளார்.
இதனையடுத்து நான்கு குழந்தைகளும் வைத்தியர்களின் விசேட பராமரிப்பில்(இன்கியூபேட்டர்) பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் , குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.