நீங்கள் பெற்றுக்கொண்ட தனிவரத்தை வாழ்ந்துகாட்டுங்கள்

தனிவரத்தைப் பெறும் ஒவ்வொரு சகோதரியும் சகோதரரும் அதை முழுமையாக வாழ அழைக்கப்படுகிறார்கள்” என்றும், “அது நிலையானதாக இல்லாது, ஒரு துடிப்பான மற்றும் படைப்பாற்றல் திறன் கொண்டதாக மாறுகிறது” என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜனவரி 29, வியாழக்கிழமையன்று, ‘ரெஞும் கிறிஸ்தி’ (Regnum Christi) எனப்படும் அப்போஸ்தலிக்க வாழ்க்கைக் கழகங்களின் பொதுப் பேரவைகளின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, அவர்கள் பெற்றுக்கொண்டுள்ள தனிவரத்தை ஆழப்படுத்தவும், நிர்வாகத்தைப் புதுப்பிக்கவும், உறவு ஒன்றிப்பை வலுப்படுத்தவும் கேட்டுக்கொண்டார்

தொடர்ந்து பொதுப் பேரவைக் குறித்துப் பேசிய திருத்தந்தை, “உங்களின் நம்பிக்கையைப் பரப்புவதற்கு தெளிவான அடையாளத்தைக் கொண்டிருப்பது முக்கியம்” என்றும், “நவீன கலாச்சாரத்தால் விழுங்கப்படுவதிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளவதில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.

அவர்கள் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்டுள்ள தனிவரத்தை ‘தூய ஆவியாரின் உயிருள்ள கொடை’ என்று விவரித்த திருத்தந்தை, “இது ஒவ்வொரு உறுப்பினராலும் அன்றாட வாழ்வில் மிகவும் ஆழமாக வாழ்ந்துக்கட்டப்பட வேண்டும்” என்று அவர்களிடம் வலியுறுத்தினார்.

Comments are closed.