இயேசுவின் சீடர்களாக மாற அழைக்கும் அன்னை மரியாவின் ஆன்மிகம்

0

மரியாவின் ஆன்மிகம் நற்செய்தியின் பணியில் உள்ளது, அது அதன் எளிமையை வெளிப்படுத்துகிறது என்றும், நாசரேத் ஊர் மரியாவின் மீதான நமது அன்பு, இயேசுவின் சீடர்களாக மாறுவதில் அவருடன் சேர நம்மை வழிநடத்துகிறது என்றும் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆன்மிகமும் இந்த நெருப்பிலிருந்து பாய்ந்து அதை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 12, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற மரியன்னை ஆன்மிகத்தாருக்கான யூபிலியில் பங்கேற்பாளர்களுக்கான யூபிலி சிறப்புத்திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நம் நம்பிக்கையை வளர்க்கும் மரியன்னை ஆன்மிகம், இயேசுவை அதன் மையமாகக் கொண்டுள்ளது என்றும், இது ஞாயிற்றுக்கிழமை போன்று ஒவ்வொரு புதிய வாரத்தையும் இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுதலின் பிரகாசத்தில் திறக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.  

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக் கொண்டாட்டமானது நம்மை கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும், அது நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் இயேசுவின் எரியும் நினைவால் நிரப்ப வேண்டும் என்றும், நாம் ஒன்றாக வாழும் முறையையும் பூமியில் வாழும் முறையையும் மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.(எபி 4:12) என்ற விவிலிய வரிகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், சிரியரான நாமானின் கதையை திருஅவையின் வாழ்க்கைக்கு பொருத்தமான மற்றும் ஊடுருவக்கூடிய செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் கண்டறிந்தார் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.