மௌனத்தை வளர்த்து இறைவனின் மறைபரப்பு சீடர்களாவோம் திருத்தந்தை

மறைபரப்பு பணிக்கு அர்ப்பணிக்கப்பட்ட  மாதமான அக்டோபர் மாதத்தில் மறைபரப்பு சீடர்களாக, மௌனத்தில் வளர்ந்து இறைவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ வலியுறுத்தி,  தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனதில் மௌனத்தை வளர்த்து, இறைவனுடன் நெருங்கிய  தொடர்பு கொண்டு, அவர் வாழத்தூண்டும் வகையில் வாழும் போது, நமது  அழைப்பிற்கு நம்பிக்கை உடையவர்களாக, இறைவனின் மறைபரப்பு சீடர்களாக வாழ்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உரோம்  குழந்தை இயேசு  மருத்துவமனைக்கு உதவிபுரிபவர்கள் சிலரை வத்திக்கானில் இன்று திருத்தந்தை சந்தித்து மகிழ்ந்தார். ஐரோப்பாவின் மிகப்பெரிய சிறார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமாக திகழும் இம்மருத்துவமனைக்கு உதவிபுரிபவர்களை வாழ்த்திப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை.

உலகின் முக்கியமான மருத்துவ மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள இம்மருத்துவமனை, இத்தாலி மற்றும் பிறவெளிநாடுகளில் இருந்து வரும் சிறார் மற்றும் இளைஞர்களின் உடல்நலனிற்கு உதவுவதில்  ஒரு முக்கிய பங்காற்றிவருகின்றது.

Comments are closed.