இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் என்றும் இறைவனோடு இணைந்திருந்து மிகுந்த கனிதர இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.” என இயேசு கூறுகிறார்.
நமது வேண்டுதல்கள் கேட்கப்பட இறை வார்த்தைகளை மனதில் கொண்டு நாம் இறைவனில் நிலைத்திருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 05.05.2021 இன்று விஷேசமாக அனைத்து குழந்தைகள் மற்றும் இளையோருக்காக முக்கியமாக இத்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக பிராத்திப்போம். அவர்கள் அனைவரும் பரிபூரண சுகம் பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இந்தியாவிலும், பிற நாடுகளிலும் மறுபடியும் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்று பரவுதல் கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
உயிர்த்த கிறிஸ்து நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற, நம்பிக்கையை ஊட்ட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.