இன்றைய புனிதர் 2021-03-08 சபை நிறுவுநர் யோஹானஸ் Johannes von Gott

பிறப்பு
8 மார்ச்1495,
மோண்டேகோர் ஓ நோவோ Montemor O Novo, போர்த்துக்கல்
இறப்பு
8 மார்ச் 1550,
கிரானாடா Granada, ஸ்பெயின்
புனிதர்பட்டம் : 1886, திருத்தந்தை 13 ஆம் லியோ
பாதுகாவல் : நோயாளிகள்,மருத்துவமனைகள்,நூலகங்கள்,அச்சிடுவோர்
இவர் தனது வாழ்வில் அமைதியின்றி வாழ்ந்தார். தன்னை இறைவன் அவரின் இறைபணியை ஆற்ற அழைப்பதாக உணர்ந்தார். இதனால் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று அவிலா நகர் யோஹானஸ் அவர்களை பின்பற்றி, மறைபரப்பு பணியை ஆற்றினார். அப்பணியுடன் மருத்துவமனைகளை கட்டி எழுப்பினார். செவிலியர் படிப்பை ஸ்பெயினில் அறிமுகப்படுத்தினார். இவர் மருத்துவமனைகளுக்குச் சென்று மனநோயால் துன்பப்படும் மக்களிடம் மணிக்கணக்கில் அமர்ந்து உரையாடி ஆறுதல் வழங்கினார்.
துன்பங்களிலிருந்து வெளியேறி நலமான வாழ்வை வாழ வழிகாட்டினார். இவர் 1540 ல் கிரானாடாவிலும் மருத்துவமனையை நிறுவினார். இவர் ஊர் ஊராகச் சென்று நோயாளிகளை கவனித்தார். மறைப்பணி ஆற்றும்போது எண்ணிலடங்கா வேதனைகளை அனுபவித்தார்.
செபம்:
நலம் அளிக்கும் வல்லவரே எம் தலைவா! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நீர் ஏதோ ஓர் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றீர். மனநோயால் அவதிப்படும் உள்ளங்களை நீர் கண்ணோக்கியருளும். நீர் தாமே உள்ளத்தின் வேதனைகளை அறிந்து அவற்றை ஆசீர்வாதமாக மாற்றியருளும். துக்கம் மறைந்து மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
டோலேடோ நகர் பேராயர் ஜூலியானூஸ் Julianus von Toledo
பிறப்பு : 652, ஸ்பெயின்
இறப்பு : 8 மார்ச் 690, டோலேடோ, ஸ்பெயின்
ஜார்ஜ் மைக்கேல் விட்மன் Georg Michael Wittmann
பிறப்பு : 22 ஜனவரி 1760, பின்கன்ஹாம்மர் Finkenhammer, பவேரியா
பேராயராக : 1829, ரேகன்ஸ்பூர்க் Regensburg
இறப்பு : 8 மார்ச் 1833 ரேகன்ஸ்பூர்க், ஜெர்மனி

Comments are closed.