தேவ இறை இரக்கத்தின் ஜெபமாலையின் வல்லமை

கொஞ்சம் நீளமான பதிவு ஆனால் நமது இரட்சண்யத்திற்கு மிகவும் தேவையான பதிவு முழுமையாக படியுங்கள்
இறை இரக்க ஜெபமாலை, பாவப் பரிகார ஜெபமாகவும், கடவுளின் கடுஞ்சினம் தணிக்கப்படுவதற்காகவும், 1935, செப்டம்பர் 13-14 நாட்களில், வில்னியுஸ் என்னுமிடத்தில் ஆண்டவராகிய சேசுநாதராலேயே சகோதரி ஃபாஸ்டினாவுக்கு அறிவிக்கப்பட்டது (நாட்குறிப்பு, 474-476 காண்க).
இந்த ஜெபமாலை சொல்கிறவர்கள், தங்கள் பாவங்களுக்கும், தங்கள் நேசத்திற்குரியவர்களின் பாவங்களுக்கும், அகில உலகத்தின் பாவங்களுக்கும் பரிகாரமாக, சேசுகிறீஸ்துநாதரின் “திருச்சரீரத் தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தெய்வீகத்தையும் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். சேசுவின் பலியோடு தங்களை இணைப்பதன் மூலம், நம் பரலோகப் பிதா தம் திருச்சுதன் பேரிலும், அவரில், மனுக்குலம் முழுவதன் பேரிலும் கொண்டிருக்கிற மாபெரும் சிநேகத்திடம் அவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்
இந்த ஜெபத்தின் வழியாக விண்ணப்பிக்கிறவர்கள், “எங்கள் பேரிலும் அகில உலகின் பேரிலும் இரக்கமாயிரும்” என்று வேண்டிக் கொள்கிறார்கள். இதன் மூலம், அவர்கள் இரக்கத்தின் செயல் ஒன்றைச் செய்கிறார்கள் விசுவாசிகள் இதனோடு நம்பிக்கையின் அடித்தளத்தை இணைத்து, ஒவ்வொரு நல்ல ஜெபத்திற்கும் உரிய நிபந்தனைகளை (தாழ்ச்சி, விடாமுயற்சி, தேவ சித்தத்திற்கு ஒத்திருக்கிற கருத்துக்கள்) நிறைவேற்றினால், விசேஷமாக மரண வேளையோடு தொடர்புடையதாக இருக்கிற கிறீஸ்துவின் வாக்குறுதிகள் நிறைவேறுவதை அவர்கள் எதிர்பார்க்கலாம். அந்த வாக்குறுதிகள்: மனந்திரும்புதல், மற்றும் சமாதானமுள்ள மரணம் ஆகியவற்றின் வரப்பிரசாதம் ஆகும்.
இந்த ஜெபமாலையை ஜெபிப்பவர்கள் மட்டுமல்ல, மாறாக மரிக்கிற ஒரு மனிதனின் பக்கத்திலிருந்து மற்றவர்கள் இதை ஜெபிக்கும்போது, அந்த மனிதனும் இந்த வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்கிறான், “இந்த ஜெபமாலை மரிக்கிற ஒரு மனிதனின் படுக்கையருகில் சொல்லப் படும் போது, கடவுளின் கோபம் தணிக்கப்படுகிறது. ஆழங்காண முடியாத இரக்கம் அவனுடைய ஆக்துமத்தைச் சூழ்ந்து கொள்கிறது” என்று ஆண்டவர் கூறினார் (நாட்குறிப்பு. 611), “… நீங்கள் கேட்பது என் சித்தத்திற்கு ஒத்ததாயிருந்தால்” (நாட்குறிப்பு 1731) “இந்த ஜெபமாலையைச் சொல்லி என்னிடம் அவர்கள் கேட்கிற எல்லாவற்றையும் தந்தருள்வது என்னை மகிழ்விக்கிறது” (நாட்குறிப்பு 1541) என்று பொது வாக்குறுதி சொல்கிறது. ஏனெனில், கடவுளின் சித்தத்திற்கு ஒத்திராத எதுவும் மனிதர்களுக்கும், விசேஷமாக அவர்களுடைய நித்திய மகிழ்ச்சிக்கும் நல்லதல்ல.
வேறொரு சந்தர்ப்பத்தில், …இந்த ஜெபமாலையைச் சொல்வதன் மூலம், நீங்கள் மனுக்குலத்தை எனக்கு அருகாமையில் கொண்டு வருகிறீர்கள்” (நாட்குறிப்பு 929) என்று சேகநாதர் கூறினார். மீண்டும்: “இந்த ஜெபமாலையைச் சொல்கிற ஆத்துமங்கள் தங்கள் வாழ்நாட்களின் போதும், விசேஷமாக தங்கள் மரண வேளையிலும் என் இரக்கத்தால் அணைத்துக் கொள்ள படுவார்கள்” என்றார் அவர் (நாட்குறிப்பு 754),
இறை இரக்கத்தின் நேரம். 1937 அக்டோபரில், க்ராக்கோவில், அர்ச். ஃபாஸ்டினாவால் முழுமையாக விளக்கப்படாத சூழ்நிலைகளில், ஆண்டவராகிய சேசுநாதர் தமது மரண நேரத்திற்கு வணக்கம்
செலுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்: …பிற்பகல் மூன்று மணியடிக்கும் சத்தம்
கேட்கும்போதெல்லாம், என் இரக்கத்தை ஆராதித்தபடியும், அதை மகிமைப்படுத்தியபடியும்
அதனுள் முழுமையாக உன்னையே மூழ்க வை; உலக முழுவதற்காகவும், விசேஷமாக பரிதாபத்திற்குரிய பாவிகளுக்காகவும் அதன் சர்வ வல்லமையை மன்றாடு; ஏனெனில், அந்த வேளையில் ஒவ்வொரு ஆக்துமத்துக்காகவும் என் இரக்கம் விரியத் திறக்கப்பட்டது” (நாட்குறிப்பு. 1572).
தேவ இரக்க பக்தியின் இந்த வடிவத்திற்குப் பொருத்தமான ஜெபங்களையும் ஆண்டவராகிய சேசுநாதர் தீர்மானித்தார்: ..இந்த வேளையில், உன் கடமைகள் அனுமதிக்குமானால், உன்னால் முடிந்த வரை, சிலுவைப்பாதை செய்ய முயற்சி செய். சிலுவைப் பாதை செய்ய உன்னால் இயலாது என்றால், அப்போது குறைந்த பட்சம் ஒரு சிற்றாலயத்திற்குள் ஒரு கணம் நுழைந்து, திவ்விய நற்கருணையில், இரக்கத்தால் நிரம்பியிருக்கிற என் திரு இருதயத்தை ஆராதிப்பாய்; ஒரு சிற்றாலயத்திற்குச் செல்லவும் உன்னால் இயலாது என்றால், நீ இருக்க நேர்கிற இடத்தில், ஒரு மிகக் குறுகிய நேரத்திற்காவது, ஜெபத்தில் உன்னையே மூழ்க வை” (நாட்குறிப்பு, 1572)
இந்த வேளையில் செய்யும் ஜெபங்கள் கேட்கப்படுவதற்கு பேராசிரியர் ரோஸிக்கி மூன்று நிபந்தனைகளைப் பட்டியலிடுகிறார்
1. அவை சேசுநாதரை நோக்கி செய்யப்பட வேண்டும்
2.அவை பிற்பகல் 3 மணிக்கு சொல்லப்பட வேண்டும்.
3. அவை கிறீஸ்துவின் பாடுகளின் மதிப்பு மற்றும் பேறுபலன்கள் ஆகியவற்றிடம் விண்ணப்பிக்க பட வேண்டும்
இந்த நேரத்தில், நீ உனக்காகவும், மற்றவர்களுக்காகவும் கேட்கிற எதையும் பெற்றுக் கொள்ளலாம். இது அகில உலகத்திற்கும் வரப்பிரசாதத்தின் நேரமாக இருந்தது–இரக்கம் நீதியின்மீது வெற்றி பெற்றது” (நாட்குறிப்பு, 1572),
தேவ இரக்கத்திற்கு வணக்கம் செலுத்தும் வழக்கத்தைப் பரப்புதல்,
தேவ இரக்க பக்தியின் அத்தியாவசியமான அம்சங்களைப் பற்றி விவாதிக்கும்போது, சங். ரோஸிக்கி, தேவ இரக்கத்திற்கு வணக்கம் செலுத்தும் வழக்கத்தைப் பரப்புவதையும் அவற்றில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். ஏனெனில் கிறீஸ்துநாதருடைய சில குறிப்பிட்ட வாக்குறுதிகள் இதனோடும் தொடர்புள்ளவையாக இருக்கின்றன: “என் இரக்க வணக்கத்தைப் பரப்புகிற ஆத்துமங்களின் வாழ்நாள் முழுவதையும் ஒரு கனிவுள்ள தாய் தன் பச்சிளங் குழந்தையைப் பாதுகாப்பது போல, நான் பாதுகாக்கிறேன் அவர்களுடைய மரண வேளையில், நான் அவர்களுடைய நடுவராயிராமல், இரக்கமுள்ள இரட்சகராக இருப்பேன்” (நாட்குறிப்பு, 1075)
தேவ இரக்க பக்தியின் சாராம்சம் கடவுளில் நம்பிக்கை கொள்வதாகிய கிறீஸ்தவ மனநிலையிலும், அயலார் பேரில் கொள்ளும் செயலூக்கமுள்ள அன்பிலும் காணப்படுகிறது. “என் சிருஷ்டிகளிடமிருந்து நான் நம்பிக்கையை ஆசிக்கிறேன்” (நாட்குறிப்பு 1059) என்று ஆண்டவராகிய சேசுநாதர் சொன்னார். மேலும் செயல்கள், வார்த்தைகள், மற்றும் ஜெபங்கள் மூலம் அவர்கள் இரக்கம் காட்ட வேண்டுமென்றும் அவர் எதிர்பார்க்கிறார். மேலும்: “நீ உன் அயலாருக்கு நீ எப்போதும், எல்லா இடங்களிலும் இரக்கம் காட்ட வேண்டும். இதில் இருந்து நீ விலகக் கூடாது அல்லது இதைச் செய்யாமலிருக்க சாக்குப் போக்குச் சொல்ல முயல்வதோ. இதிலிருந்து உன்னையே நீ விடுவித்துக் கொள்வதோ கூடாது” (நாட்குறிப்பு 742) என்று அவர் சொன்னார். தம்மை ஆராதிப்போர் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு பிறர்சிநேகச் செயலிலாவது ஈடுபட வேண்டும் என்று கிறீஸ்து விரும்புகிறார்.
தேவ இரக்கத்தின் வணக்கத்தைப் பரப்புவதற்கு அநேக வார்த்தைகள் தேவையில்லை. மாறாக எப்போதும் விசுவாசம், கடவுளில் நம்பிக்கை, இன்னும் அதிகம் இரக்கமுள்ளவனாதல் ஆகியவற்றின் கிறிஸ்தவ மனநிலை அவசியம். அர்ச், ஃபாஸ்டினா தன் வாழ்நாளில் இத்தகைய அப்போஸ்தலிக்க அலுவலின் முன்மாதிரிகையையே தந்தார்
தேவ இரக்கத்தின் அப்போஸ்தலிக்க இயக்கம்
தேவ இரக்க பக்தி திருச்சபையில், கிறீஸ்தவ நம்பிக்கை மற்றும் இரக்கத்தின் உணர்வில் துறவற ஜீவியம் புதுப்பிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அர்த்தத்தில்தான் நாட்குறிப்பின் பக்கங்களில் நாம் வாசிக்கிற “புதிய துறவற சபை” என்னும் கருத்து சிந்திக்கப்பட வேண்டும். கிறீஸ்துவின் இந்த விருப்பம் சகோதரி ஃபாஸ்டினாவின் சொந்த சிந்தனையில் படிப்படியாக முதிர்ச்சியடைந்து, ஒரு குறிப்பிட்ட பரிணாம மாற்றமடைந்தது. அதாவது ஒரு கண்டிப்பான காட்சிதியான ஒழுங்கிலிருந்து முழுவதுமாக மாற்றமடைந்து (ஆண், பெண் இரு பாலாருக்குமான) செயல்பூர்வமான சபைகளையும், பொது நிலையினரின் சபைகளையும் உள்ளடக்கிய ஓர் இயக்கமாக மாறியது.
இந்த சுபாவத்திற்கு மேலான, மாபெரும் மக்கள் சமூகம் ஒரே குடும்பமாக இருக்கிறது. அந்த இரக்கத்தைத் தங்கள் சொந்த இருதயங்களிலும், வேலைகளிலும் அவர்கள் பிரதிபலிக்குமாறும், கடவுளின் மகிமைக்காக, எல்லா ஆத்துமங்களிலும் அது பிரதிபலிக்கப்படுமாறும். இது எல்லாவற்றிற்கும் முதலில் கடவுளின் இரக்கத்தின் பரமஇரகசியத்தில் அவராலும், இரண்டாவதாக மக்களின் ஏக்கத்தாலும் ஒரே குடும்பமாக இணைக்கப்படுகிறது. அது, தங்கள் ஜீவிய அந்தஸ்தையும் (குருத்துவம், துறவறம், பொதுநிலை என்றும் தங்கள்) அழைத்தலையும் பொறுத்து, பல வகைகளில் நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றின் சுவிசேஷ மாதிரிகையின்படி வாழ்பவர்களும், தங்கள் ஜீவியத்தாலும், வார்த்தைகளாலும் கடவுளின் இரக்கத்தின் பரம இரகசியத்தை அறிக்கையிடுபவர்களும், தங்கள் ஜெப மன்றாட்டுக்களின் மூலம் உலகிற்கு தேவ இரக்கத்தைப் பெற்றுத் தருபவர்களுமான மக்களின் சமூகமாக இருக்கிறது. இந்தப் பொதுநலமானது குருக்கள் சபைகள் கூட்டு ஜீவிய சபைகள், சகோதரத்துவ சபைகள், பொதுநிலை அமைப்புகள் மற்றும் தனி மனிதர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது–ஒரே வார்த்தையில் சொல்வதானால், அர்ச். ஃபாஸ்டினாவிடம் ஒப்படைக்கப்பட்ட பணியின் நிறைவேற்றத்தோடு தொடர்புள்ளவர்களாகிற ஒவ்வொரு மனிதனையும் உள்ளடக்கியதாக இது இருக்கிறது
தேவ இரக்கத்தின் அதிமிக மகிமைக்காக
அர்ச். பாஸ்டினா டைரியில் இருந்து இந்த பதிவு
தொடரும்….
ஆமென்.

Comments are closed.